Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM
மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், வேளாண் அலுவலகம் அருகே நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில், ஒன்றியச் செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் நூற்றுக்கும் மேற் பட்ட விவசாயிகள் பேரணியாக வேளாண்மை அலுவலகம் வரை சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை மாத வாரியாக உடனடியாக பெற்றுத் தர காவிரி மேலாண்மை ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண் டும்.
டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யத் தேவையான, விதை நெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவற்றை 100 சதவீதம் மானிய விலையில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க கிடங்குகள் மூலம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
2020–2021-ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக சம்பந் தப்பட்ட காப்பீட்டு நிறுவனத் திடமிருந்து பெற்றுத் தர வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டன.
இதில், சங்கத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், பொருளாளர் கே.பி.துரைராஜ், துணைத் தலைவர்கள் சி.ஆர்.அன்பழகன், சி.துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT