Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
பர்கூரில் நேற்று மாற்றுத்திறனாளி களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பர்கூரில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இம்முகாமில் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் பார்வை யிட்டார். அப்போது அவர் கூறும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே அஞ்செட்டியில் நடந்த சிறப்பு முகாமில் 65 பேருக்கும், பர்கூரில் 105 மாற்றுத்திறனாளி களுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
இதேபோன்ற சிறப்பு முகாம் களை மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT