Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
கர்நாடகாவில் சரக்குக் கப்பல் மோதி மாயமான ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2 பேரின் நிலையைக் கண்டறியக்கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடி விசைப்படகில் தமிழக மீனவர்கள் 7 பேர், மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 11-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த 14-ம் தேதி இரவு மங்களூரு கடல்பகுதியில் மீன் பிடித்தபோது, சிங்கப்பூரில் இருந்துவந்த சரக்குக்கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 7 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற 5 பேரின் நிலை தெரியவில்லை.
ஏழு தமிழக மீனவர்களில் ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் உள்ளனர். இதில் வேல்முருகன் என்பவர் மீட்கப்பட்டார். பழனிவேல் என்பவரின் உடல் கிடைத்தது.
வேதமாணிக்கம் (31), பால முருகன் (27) ஆகியோரது நிலை இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் வேதமாணிக்கத் தின் மனைவி விஜயா (21), 4 மாத ஆண் குழந்தையுடனும், பால முருகனின் மனைவி தஸ்ரேஸ் (26), 7 வயது மகன், 6 வயது மகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், தங்களது கண வர்களின் நிலையைக் கண்டறி யவும் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தனர். அப் போது, ஆட்சியர் மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். அதிமுக ஒன்றியச் செயலாளர் அந்தோணிராஜ், கிராமத் தலைவர் குருசாமி நாடார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT