Published : 25 Apr 2021 06:11 AM
Last Updated : 25 Apr 2021 06:11 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் அவசரம், மருத்துவ காரணங்களை தவிர்த்து வெளியில் யாரும் நடமாட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா முழு ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதி கரித்து வருவதால் அதை தடுப்பதற் காக பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவளித்து வீடுகளில் இருக்க வேண்டும். விதிகளை பின்பற்றி திருமணங்களில் 100 பேருக்கு மேல்பங்கேற்கக்கூடாது. இதை கண் காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவசரம் மற்றும் மருத்துவ தேவை காரணங்கள் இல்லாமல் வெளியில் யாரும் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் கரோனா தொற்று மற்றும் பிற சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தை 04179-222111 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT