Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
தானமாக வழங்கப்படும் குளத்தை அழிப்பவருக்கு, பசுவைக் கொன்ற பாவம் கிடைக்கும் என்ற தகவல் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பட்டமங் கலத்தில் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது
முற்காலத்தில் குளம் வெட்டித் தருமம் செய்வதை மனிதர்களின் முக்கிய கடமையாகக் கருதினர். அவ்வாறு 373 ஆண்டுகளுக்கு முன்பு துகவூருடையான் என்பவர் ஒரு குளத்தை வெட்டி அதற்கு “உடையான் நாயன்” எனப் பெயரிட்டு தருமமாகக் கொடுத்த தகவலைச் சொல்லும் பழமையான கல்வெட்டு, ராமநாதபுரம் மாவ ட்டம், திருவாடானை அருகே பட்டமங்கலத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
பட்டமங்கலம் சிவன் கோயில் எதிரில் உள்ள குளத்தைத் தூர் வாரும் போது வெளிப்பட்ட 4 அடி நீளம், 1 அடி அகலம் உள்ள ஒரு தூணில் கல்வெட்டு இருப்பதாக பட்டமங்கலம் காமராஜ் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு அக்கல் வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
தூணின் இரு பக்கங்களில் கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 40 வரிகள் உள்ள கல்வெட்டு உ சகாத்தம் எனத் தொடங்கி உ என முடிகிறது. கல்வெட்டில் சர்வ தாரி வருஷம், ஆனி மாதம் 14 ஆம் நாள் என தமிழ் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.பி.1648 ஆக இருக்கலாம் எனக் கணிக்கமுடிகிறது.
அரும்பூர் கூற்றத்து கலியநேரி துகவூருடையான் பொன்னி அடைப்பார் உடைய நாயனாயன் இவ்வூரில் உடையான் நாயன் என்ற பெயருள்ள ஒரு குளத் தை தருமமாக வெட்டிக் கொடுத் துள்ளார். இக்குளத்தை அழிவு செய்தவன் கெங்கைகரையில் காராம் பசு, பிராமணனைக் கொன்ற பாபத்திலே போவான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஆயிரவேலி தன்மம் எனக் குறிப்பிட்டு அதைக் காத்த வர்களுக்கு சந்திரன், சூரியன் உள்ளவரை மாது காப்பறம் புண் ணியம் என்கிறது கல்வெட்டு.
அதாவது பெண்களைக் காப்பது எவ்வளவு புண்ணியமோ அவ் வளவு புண்ணியம் இக்குளத்தை காப்பதால் வரும் என்கிறது. ஆயிரவேலி என்ற பெயரில், அருகில் ஒரு ஊர் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
கல்வெட்டில் குறிப்பிடப்படும் கலியநேரி, பட்டமங்கலத்திலிருந்து மேற்கில் 2 கி.மீ. தொலைவில் இரு ந்து அழிந்துபோன ஒரு ஊர் ஆகும். அவ்வூரைச் சேர்ந்த துகவூரு டையான் பொன்னி அடைப்பார் உடைய நாயனாயன் என்பவர் சேதுபதிகளின் அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். கூத்தன் சேதுபதி மற்றும் தளவாய் சேதுபதி ஆகிய இருவருக்கும் உடைய நாயன் என்ற அடை மொழி இருந்துள்ளதை, அவர் களின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
சுந்தரசோழன் காலம் முதல் வரலாற்றில் இடம் பெற்றிருந்த அரும்பூர் கூற்றம் எனும் நாட்டுப் பிரிவு பாண்டியர், சேதுபதிகள் காலக் கல்வெட்டுகளிலும் காணப் படுவது குறிப்பிடத்தக்கது.
கி.பி.13-ம் நூற்றாண்டு பிற்காலப் பாண்டியர் கால அமைப்பில், முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட இடிந்த நிலையில் இருந்த இவ்வூரின் பழைய சிவன் கோயில், முழுவதும் அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப் பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றி இடைக்காலப் பானை ஓடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT