Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களை 2 மணி நேரத்துக்குள் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. கடந்த ஆண்டு கரோனா பரிசோதனை செய்து கொண்ட வர்களில் பெரும்பாலானோர் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் முடிவு தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், தற்போது கரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் உடனடியாக வெளியூர் சென்று விடுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் வேகமாக பரவுகிறது. இதைத் தடுக்கும் விதமாக பரிசோதனை முடிவு தெரிந்த 2 மணி நேரத்துக்குள், கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையில் நடந்த கரோனா பரவல் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் கூறும்போது, கரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சேர் வதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களது உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். என்றார்.
இக்கூட்டத்தில் சுகாதாரத் துணை இயக்குநா்கள் யசோதாமணி, யோகவதி, பூச்சியியல் வல்லுநர் ரமேஷ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT