Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

கலைநிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புறக் கலைஞர்கள் மனு

திருவிழாக்களில் கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாட்டுப்புற நடனக் கலைஞர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

திண்டுக்கல்

சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிகோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர், திண் டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட நாட்டுப்புற, தப்பாட்ட,கரகாட்டக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், பந்தல் அமைப் பாளர்கள், பேண்ட் வாத்தியக் குழுவினர் 200-க்கும் மேற்பட்டோர், திண்டுக்கல் புறவழிச் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். இதில் தலையில் கரகம் ஏந்தியும், தெய்வங்கள் வேடமணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பின்னர், ஆட்சியர் மு.விஜய லட்சுமியிடம் மனு அளித்தனர்.

அதில், திருவிழாக்களுக்கு தடை விதிப்பால் கலை நிகழ்ச்சி கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக இடைவெளியைப் பின்பற்றி திருவிழாக்களை நடத்தவும், உரிய வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி கலை நிகழ்ச் சிகளை நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தனர்.

விருதுநகர்

இதேபோல் விருதுநகர் ஆட் சியர் இரா.கண்ணனிடம் நாடக, நாட்டுப்புறக் கலைஞர்கள் மனு அளித்தனர்.

அதில், விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளோம். ஏற் கெனவே 8 மாதங்களாக இருந்த ஊரடங்கால் பெரும் பாதிப்புக்கு ஆளானோம்.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு கோயில் திருவிழாக்களில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர் பார்த்தோம். ஆனால், மீண்டும் தடை விதித்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

சிறு கோயில்களில் கட்டுப்பா டுகளுடன் கூடிய திருவிழாக்கள் நடத்த அனுமதியளிக்க வேண்டும். அதோடு, மாதம் பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை

தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத் தலைவர் ஜெயம், செயலாளர் முருகதாஸ், பொருளாளர் பால சுப்பிரமணியம் ஆகியோர் தலை மையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மாசி முதல் வைகாசி மாதம் வரை கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நாடகம் நடத்த முன்பதிவு செய்துள்ளோம்.

மதுரையில் இத்தொழிலை நம்பி 3 ஆயிரம் பேர் உள்ளோம். தேர்தல் நேரத்தில் இரவு 10 மணிக்குமேல் நிகழ்ச்சி நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டோம். எனவே சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் நாடகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் நாட்டுப்புற நடனக் கலைஞர்களும் கட்டுப்பாடுகளுடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாட்டுப்புற இசைக்கலைஞர் கள், கிராமியக் கலைஞர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். கரோனா பரவலால் கோயில் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்புற இசை, நாடகம், மேள தாள இசைக் கலைஞர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையிலும், மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்றச் சங்கத் தலைவர் மருங்கன் தலைமையிலும் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x