Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

அரக்கோணம் இரட்டைக் கொலையில் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

திருவாரூர்/ திருச்சி

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திருவாரூர், நாகை, காரைக்கால், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சோமனூர் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா ஆகியோர் அண்மையில் கொலை செய்யப் பட்டனர். இந்தச் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விசிக மாவட்டச் செயலாளர் வடிவழகன் தலைமையிலும், மன்னார்குடியில் ரமணி தலைமை யிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதேபோல, நீடாமங் கலம், திருத்துறைப்பூண்டி உள் ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை ஆட்சியர் அலுவ லகம் முன் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், விசிகவின் நாகை தொகுதி பொறுப்பாளர் அறிவழ கன் தலைமையில், நகரச் செய லாளர் தமிழ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயிலடியில் மாவட்ட துணைச் செயலாளர் பேரறிவாளன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விசிகவின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், வடக்கு மாவட்டச் செயலாளர் நீலவண்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் விசிக நகரச் செயலாளர் முரளி என்கிற பாலசிங்கம் தலைமையிலும், குளித்தலை காந்தி சிலை முன் நகரச் செயலாளர் பிரகாஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விசிக மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநி லச் செயலாளர் வீர.செங்கோலன், மண்டலச் செயலாளர் இரா.கிட்டு, பழைய பேருந்து நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.காமராசு, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.கருணா நிதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்டச் செயலாளர் மு.செல்வநம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றி யச் செயலாளர்கள் உத்திரா பதி, தங்கராசு, நகரச் செயலாளர் தலித்தாசன் உள்ளிட்டோர் கலந் துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x