Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாள ருமான சி.சீனிவாசன் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரியில் குடும்பத் தினருடன் வந்து வாக்களித்தார்.
இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டி புனித சின்னப்பர் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான ஐ.பெரியசாமி திண்டுக்கல் வாசவி மெட்ரிக் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார். அவர் கூறுகையில், மத சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, என்றார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி கள்ளிமந்தையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார். ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜன் அம்பிளிக்கையில் தனது வாக்கைச் செலுத்தினார்.
நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விசுவநாதன் வேம்பார்பட்டியில் உள்ள பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார். நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம், அவரது சொந்த ஊரான பாலப்ப நாயக்கன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பழநி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் வரதமாநதி அணைப் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பழநி தொகுதி திமுக வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் திண்டுக்கல் வாசவி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவம் திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். கல்லூரியில் வாக்களித்தார்.
வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன், மாத்தினிப்பட்டி கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி நிலக்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திமுக கூட்டணியில் போட்டியிடும் மக்கள் விடுதலைக் கட்சி வேட்பாளர் முருகவேல்ராஜன் மதுரை விளாங்குடியில் வாக்க ளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT