Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM

மருத்துவ பட்டயப் படிப்பு இரண்டாம் கட்ட : ஆன்லைன் கலந்தாய்வு மே 1-ல் தொடக்கம் :

சிவகங்கை: மருத்துவப் பட்டயப் படிப்புக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு மே 1-ல் தொடங்குகிறது என்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் பட்டப் படிப்பு (டிஎம்எல்டி, அறுவை சிகிச்சை பிரிவு டெக்னீசியன், மயக்கவியல் பிரிவு டெக்னீசியன்) சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு மே 1 முதல் மே 4-ம் தேதி வரை நடக்கிறது. இப்படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியை தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x