Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப் பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சி, மாவட்ட தேர்தல் அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில், பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆட்சியர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 124 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிப்பதற்காக வங்கி மற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் 168 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து நேரடியாக பொதுப்பார்வையாளருக்கு தகவல் அளிப்பார்கள். அனைத்து நுண்பார்வையாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் அனைத்து விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று, மாதிரி வாக்குப்பதிவு நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில்உள்ளது என்பதை நுண்பார்வையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தேர்தல்அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 11 வகையான அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், தேர்தல் வட்டாட்சியர் ச. முருகதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT