Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்ட சாலை அமைக்கப்படும் என்று விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
விழுப்புரம் தொகுதியில் அரசுக்கு எதிராக வும், அமைச்சர் சிவி சண்முகத்திற்கு எதிராகவும்அலைவீசுகிறது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அமைச்சர் சிவி சண்முகம் போலீஸ் எஸ் கார்ட் உதவியோடு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரையிடம் புகார்அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மக்கள் பொருட்படுத்தவில்லை.
விழுப்புரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம் பராமரிக்கப்படும். விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்ட சாலை அமைக்கப்படும். விரிவாக்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். வாடகை கார், வேன்களுக்கு தனி இடம், மீன், காய்கறி அங்காடி அமைக்க அவர்களின் கருத்து கேட்டு தனி இடம் அமைத்துதரப்படும். மேலும் நகரில் சமுதாயக்கூடம்,நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மியூசியம் அமைக்கப்படும். கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார். திமுக மாவட்ட பொருளாளரான முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT