Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

குறிஞ்சிப்பாடியில் அரசு கலைக்கல்லூரி வரும் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட் பாளர் கிராமபுறங்களில் கூட்ட ணிக்கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்விராமஜெயம்கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று கொளக்குடி, மேட்டுக்குப்பம், கருங்குழி, மருவாய், ஓணணாங்குப்பம், அரங்கமங்கலம், ரெட்டிப்பாளையம், கல்குணம், வரதராஜன்பேட்டை, மேலப்புதுப்பேட்டை, பெரியகாட்டுசாகை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், தொகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். வடலூரில் ஜிம் அமைக்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். அரசுகலைக்கல்லூரி கொண்டு வரப்படும். அதிமுக அரசு பெண்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. மேலும் தேர்தல்அறிக்கையில் வாஷிங்மெஷின், மாதம் ரூ. 1,500 உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவித் துள்ளார். அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x