Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM
செஞ்சி சட்டமன்ற தொகுதி செஞ்சி கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மே.பெ.சி.ராஜேந்திரன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், “அதிமுக அரசால் மருத்துவக் கல்வியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது அதிமுக வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். மேலும், பாமக வின் தொடர் போராட்டத்தால் வன்னியர்களுக்கு 10,5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று தந்திருக்கிறோம். அதிமுகவின் சாதனைகள் தொடர வேண்டும்” என்று கூறி, பாமகவின் கொள்கைகளை விளக்கி வாக்கு சேகரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT