Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04151-224155,224156, 224157, 224158 ஆகிய எண்களிலும், 1800 4253 169, 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை,வாக்காளர் சேவை மையம், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவற்றின் செயல்பாடுகளைமாவட்ட ஆட்சியர் கிரண்குராலா முன்னிலையில் தேர்தல் பொது பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் பிரசன்னா வி.பட்டனசெட்டி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுவதையும், அதன் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுவதையும், அதன்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து, புவியிடங்காட்டி மூலமாக நிலையான கண்காணிப்புக்குழு, பறக்கும் படை குழுக்கள் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்க..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் கீழ்க்கண்ட விவரப்படி தேர்தல் பொது, செலவினம் மற்றும் காவல்துறை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு - இந்துமல்கோட்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறை எண்.1, நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை, உளுந்தூர்பேட்டை.கைப்பேசி எண். 9489981084.
கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் தொகுதிகளுக்கு சந்திரசேகர் வாலிம்பே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறை எண்.1, நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை, கள்ளக்குறிச்சி. கைப்பேசி எண். 9489981082.
செலவின பார்வையாளராக பிரசன்னா வி.பட்டனசெட்டி,நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறை எண்.1, வனத்துறை பயணியர் மாளிகை, இந்திலி. கைப்பேசி எண். 9489981081.
காவல்துறை பார்வையாளராக அனுராதா சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அறை எண்.1,வனத்துறை பயணியர் மாளிகை, உளுந்தூர்பேட்டை. கைப்பேசி எண். 9489981083. பின்னர், ஊடக கண்காணிப்பு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
நாளிதழ்கள், தொலைக்காட்சி அலைவரிசை மற்றும்உள்ளூர் அலைவரிசைகளில் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி முறை யாக விளம்பரங்கள் ஒளிபரப் பப்படுவதை கேட்டறிந்தனர். இக்குழுக்கள் விழிப்புணர்வுடன் தொடர் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT