Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

தென்காசி மாவட்ட வேட்பாளர்கள் சொத்து விவரம் :

தென்காசி

சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.41.70 லட்சம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.4.57 லட்சம் மதிப்பிலும், பிள்ளைகள் பெயரில் ரூ.18 லட்சம் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது பெயரில் ரூ.5.25 கோடி மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும், தனது பெயரில் ரூ.38 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதி அமமுக வேட்பாளர் அண்ணாதுரை தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரூ.89 ஆயிரம், மனைவி பெயரில் ரூ.20.37 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது பெயரில் ரூ.1.75 கோடி, மனைவி பெயரில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.48 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரூ.23.64 லட்சம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.19.78 லட்சம் மதிப்பிலும், குடும்பத்தினர் பெயரில் ரூ.4.20 லட்சம் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். தனது பெயரில் ரூ.13 லட்சம், மனைவி பெயரில் ரூ.25 லட்சம், குடும்பத்தினர் பெயரில் ரூ.1.14 கோடி மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடையநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.5.16 கோடி, மனைவி பெயரில் ரூ.2.78 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். தனது பெயரில் ரூ.13.34 கோடி, மனைவி பெயரில் ரூ.10.82 கோடி மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது பெயரில் ரூ.65.57 லட்சம், மனைவி பெயரில் ரூ.1.20 கோடி கடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனதுபெயரில் ரூ.1.84 கோடி மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.27.41 லட்சம் மதிப்பிலும், குடும்பத்தினர் பெயரில் ரூ.38.70 லட்சம் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.

தனது பெயரில் ரூ.11.82 கோடி மதிப்பிலும், குடும்பத்தினர் பெயரில் ரூ.1.64 கோடி மதிப்பிலும் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது பெயரில் ரூ.9.25 கோடி, மனைவி பெயரில் ரூ.51.94 லட்சம், குடும்பத்தினர் பெயரில் ரூ.1.47 கோடி கடன் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆலங்குளம் தொகுதி தேமுதிக வேட்பாளரான நடிகர் ராஜேந்திர நாதன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரூ.12 லட்சம், மனைவி பெயரில் ரூ.24 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x