Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது : தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் அறிவிப்பு

விருதுநகர்

அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநில ஆலோசகர் தீபக் கூறியதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளை மீறியதோடு மட்டுமல்லாமல் சாதியப் பாகுபாட்டுடன் தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த அறிக்கையை அதிமுக திரும்பப்பெற வேண்டும். அதிமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x