Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உறுதுணையாக இருக்க வேண்டும் : மத்திய முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்

திருவாரூர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க திமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என மத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தஞ்சை தொகுதி எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியது:

அண்ணாவும், கருணாநிதியும் அரசியல் ரீதியாக ஏதேனும் கருத்துகளை மன்னார்குடி பகுதியில் வெளியிட்டு, அதை இப்பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டால் தமிழகமே ஏற்றுக்கொள்ளும் என கருதினார்கள். அந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு கொண்ட பகுதியில் உள்ள திமுக தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கவும் டி.ஆர்.பி.ராஜா 3-வது முறையாக வெற்றி பெறவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், டி.ஆர்.பி.ராஜா மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வா கிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x