Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3343 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தாராபுரம் (தனி) தொகுதி - 1675 வாக்குச்சாவடி அலுவலர்கள், காங்கயம் - 1786, அவிநாசி (தனி) - 1925, திருப்பூர் வடக்கு - 2568, திருப்பூர் தெற்கு - 1925, பல்லடம் - 2630, உடுமலைப்பேட்டை - 1824, மடத்துக்குளம் - 1714 என மொத்தம் 16,067 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
18-ம் தேதி பயிற்சி
பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சிக்கான தகவல் கடிதம், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கடிதத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள தபால் வாக்குச்சீட்டு படிவமான 12-ஐ பூர்த்தி செய்து, முதல் பயிற்சியின்போது தவறாமல் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT