Published : 14 Mar 2021 03:17 AM
Last Updated : 14 Mar 2021 03:17 AM
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆலோசனை மேற்கொண்டார். கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி பேசும்போது, “தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பதற்றமான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் மூலம் கொடி அணிவகுப்பு நடத்த வேண்டும்” என்றார்.
குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
திருநெல்வேலி ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (23), ராம்நகர் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (28), இடிந்தகரை சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த மரியலாரன்ஸ்(48), இடிந்தகரை பீட்டர் தெரு பகுதியைச் சேர்ந்த அன்டன் லியோ பிரகாஷ் (38) ஆகிய 4 பேர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் வே. விஷ்ணு உத்தரவிட்டார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT