Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM

கரூர், குன்னம், திருவாரூரில் தலா ஒருவர் வேட்புமனு தாக்கல் :

திருச்சி

2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. எனினும், திருச்சி மாவட்டத்தில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு பிப்.26-ம் தேதி வெளியானது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் தொகுதிக்கு 2 இடங்கள் வீதம் மொத்தம் 18 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று மாவட்டத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதேபோல, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலும் நேற்று ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

கரூர் மாவட்டத்தில் கரூர் தொகுதியில் போட்டியிட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் எஸ்.என்.பாலசுப்ரமணியத்திடம் சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்டச் செயலாளர் ந.சண்முகம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மற்ற தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் புகழேந்தி என்ற சுயேச்சை வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பெரம்பலூர் தொகுதியில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்திரனிடம் அமானுல்லாஹ் என்ற சுயேச்சை வேட்பாளர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x