Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளும், செலவின பார்வையாளர்களாக ஐஆர்எஸ் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் (தொகுதி பெயர், பார்வையாளர்கள் விவரம், தங்கியுள்ள முகவரி, தொடர்பு எண் என்ற அடிப்படையில்) விவரம்:
மணப்பாறை, ரங்கம் தொகுதிகளுக்கு ராம் பிரதாப் சிங் ஜேடன்,டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகை, மணப்பாறை, செல்போன் எண் 94987 47818.
திருச்சி மேற்கு தொகுதிக்கு எஸ்.என்.கிரிஷ், சுற்றுலா மாளிகை (பி 10), மன்னார்புரம், செல்போன் எண் 94987 47819.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு என்.பி.எஸ்.ராஜ்புத், சுற்றுலா மாளிகை (பி 6), மன்னார்புரம், செல்போன் எண் 94987 47820.
திருவெறும்பூர், லால்குடி தொகுதிகளுக்கு முகம்மது தயாப், பெல் விருந்தினர் மாளிகை, திருவெறும்பூர், செல்போன் எண் 94987 47821.
மண்ணச்சநல்லூர், முசிறி தொகுதிகளுக்கு கிருஷ்ணகுமார், சுற்றுலா மாளிகை (பி 9), மன்னார்புரம், செல்போன் எண் 94987 47822.
துறையூர் (தனி)- தொகுதிக்கு சுரேந்திர ராம், நெடுஞ்சாலைத் துறை பயணியர் மாளிகை, துறையூர், செல்போன் எண் 94987 47823.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள செலவின பார்வையாளர்கள்(தொகுதி பெயர், பார்வையாளர்கள் விவரம், தங்கியுள்ள முகவரி, தொடர்பு எண் என்ற அடிப்படையில்) விவரம்:
மணப்பாறை, ரங்கம் தொகுதிகளுக்கு சாரதி பெகரா, டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகை, மணப்பாறை, செல்போன் எண் 94987 47824.
திருச்சி மேற்கு தொகுதிக்கு துர்கா லால் மீனா, சுற்றுலா மாளிகை (பி 4), மன்னார்புரம், செல்போன் எண் 94987 47825.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு அப்பு ஜோசப் ஜோஸ், சுற்றுலா மாளிகை (பி 7), மன்னார்புரம், செல்போன் எண் 94987 47826.
திருவெறும்பூர், லால்குடி தொகுதிகளுக்கு அஜய்குமார் அரோரா, பெல் விருந்தினர் மாளிகை, திருவெறும்பூர், செல்போன் எண் 94987 47827.
மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) தொகுதிகளுக்கு லக்சய் குமார், சுற்றுலா மாளிகை (பி 5)- மன்னார்புரம், செல்போன் எண் 94987 47828.
காவல் துறை பார்வையாளர்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் காவல் துறை பார்வையாளராக முக்விந்தர் சிங் சின்னா(95929 12025 ) நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்தில் நேரடியாக (காலை 9.30 மணி முதல் 10.30 வரை) அல்லது செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT