Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

சட்டப் பணிகள் குழுவில் தன்னார்வலர்கள் தேர்வு : விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்

மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி தனசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு, ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்எஸ்டபிள்யூ மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பம் செய்யலாம். அடிப்படை கல்வி, கணினி பற்றி அறிந்திருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/tn/namakkal என்ற நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 8-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம், ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.

இதுதொடர்பாக மேலும் விவரம் அறிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x