Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க பறக்கும் படைகள்

திருப்பூர்

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பை யொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மூன்று வீதம்24 பறக்கும் படைகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்குவந்துள்ளதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு கட்டிடங்கள், போக்குவரத்து அலுவலக கட்டிடங்களில் உள்ள முன்னாள் முதல்வர்,முதல்வர் படங்கள் மறைக்கப்பட்டன.

24 பறக்கும் படை குழுக்கள்

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, "ஒரு சட்டப்பேரவைத்தொகுதிக்கு மூன்று வீதம் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு அலுவலர்கள் மற்றும் போலீஸார்இடம்பெற்றிருப்பார்கள். அதேபோல,ஒவ்வொரு தொகுதியிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 3 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளுக்கு 120 பேர்அடங்கிய 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், நேற்று முதல் வாகன சோதனையை தொடங்கினர். பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்வதற்கான ஆதாரங்கள்,ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லவேண்டும். தொகுதிக்கு நிலையான 3 கண்காணிப்புக் குழுக்கள் வீதம், 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதிக்கு இரண்டு வீடியோ கண்காணிப்புக் குழுவீதம் 16 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x