Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
2020-21-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு செலுத்த மார்ச் 31-ம் தேதி கடைசி நாள்என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020-21-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு செலுத்த மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் பகுதி மற்றும் பணிமனை அலுவலக வசூல் மையங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். நுகர்வோர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நுகர்வோர் தங்களது நிலுவைத் தொகையை https://chennaimetrowater.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக ஆன்-லைனில் செலுத்தலாம். தற்போது சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், எண்:75, நகர் நிர்வாக அலுவலகம், சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600028 என்ற முகவரியில் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT