Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
கீழ்ப்பாக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை டிபி சத்திரம் 14-வது தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (23). அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். கடந்த 22-ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது காதலன் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஐசக் மனோஜ்குமார்தான் காரணம் என்று சரண்யா உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிந்து ஐசக் மனோஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், “திருமணத்துக்கு 3 ஆண்டுகள் அவகாசம் கேட்டேன். சரண்யா தரப்பில் ஏற்கவில்லை. மேலும் உறவினர் வழியில் ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சிகள் மேற்கொண்டதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த நாள் முதல் தனது வீட்டுப் பகுதியில் கத்தியுடன் சிலர் திரிவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT