Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில் சட்டமன்றத் தேர்தலை நடுநிலைமையோடு நடத்துவோம் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

எந்தவித புகாருக்கும் இடம் தராமல், சட்டமன்றத் தேர்தலை நடு நிலைமையோடு நாம் நடத்த வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத் தியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நன்ன டத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்துஅனைத்துத்துறை அலுவலர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை தலைமை யில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6-ம்தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில்உள்ள காலம் வரை அரசு அலுவலகங்கள், பொது பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களில் பிரதமர், முதல்வர், அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரின் படங்கள்இடம் பெறக்கூடாது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறையில் கட்டுப்பாட்டில்உள்ள சுற்றுலா மாளிகைகளை பூட்டி, சம்மந்தப்பட்ட தாசில்தார்களிடம் சாவியை ஒப்படைக்க வேண் டும். தேர்தல்ஆணையத்தின் முன் அனுமதியின்றி புதிதாக நிதிஅளிப்பதோ, பணிகள் நடை பெறுவதோ அல்லது ஒப்பந்தம் வழங்கவோ கூடாது.

பணிகளில் பாரபட்சம் வேண்டாம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கும் வரும் முன்பேபணிக்கான ஆணை வழங்கப்பட்டி ருந்தாலும், தற்போது பணி தொடங்கப்படாமல் இருந்தாலும் அந்தபணிகளை தொடங்கக் கூடாது. நலத்திட்டப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 24 மணி நேரத்திற்குள் விளம்பரங்களை அழிக்க வேண்டும். நெடுஞ்சாலை களில் 48 மணி நேரத்திற்குள் விளம் பரங்களை அழிக்க வேண்டும்.

சட்டசபை பொதுத் தேர்தலை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில், நடுநிலையுடன் பணியாற்றி நல்ல முறையில் தேர்தல் நடைபெற தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும், இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட் டில் உள்ளோம். உங்களது நடவ டிக்கைகள் ஒருதரப்பினருக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினருக்கு பாதமாகவும் இல்லாமல் சம வாய்ப்புகளை வழங்கி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், வானூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக் கோவிலூர், மயிலம் ஆகிய 7 சட் டமன்றத்தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 தொகுதிகளிலும், 56 இடங்களில் பிரச்சாரம் செய்யலாம். காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து அரசியல்கட்சியினர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை உடனடியாக, அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதனை எஸ்பி உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதேர்தல் அலுவலர், “வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து சேரும் ஏப்ரல் 7-ம் தேதி வரை பறக்கும்படை அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும். சியூஜி ஆப் மூலம் பெறப்படும் புகார்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் திண்டி வனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம் தொகுதி தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து வாகனங்களையும் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ய வேண்டும்.

புதுச்சேரியை ஒட்டிய தமி ழகப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள 9 மதுவிலக்கு சோதனை சாவடிகளுடன் கூடுதலாக 7 சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். பெண்களின் ஹேண்ட் பேக், பர்ஸ் போன்றவற்றை பெண்அதிகாரிகள் மட்டுமே சோதனை செய்ய வேண்டும். பொது மக்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும். மிரட்டவோ, பயமுறுத் தவோ கூடாது“ என்றும் அறிவு றுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x