Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டிருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்ஆகியவை ரத்து செய்யப்படு வதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு பெற்ற பின்னர் நடத்தப்படும் என்றும் ஆட்சியர் அலுவலகத்தில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கடலூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் சமையலர் பதவிக்கான தேர்வு, குடிசை மாற்று வாரியத்தில் நடைபெற்று வந்த அலுவலக உதவியாளர் தேர்வு, ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அந்தந்தஅலுவலகங்களில் அறிவிப்பு ஒட் டப்பட்டிருந்தது.
இதனால், நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே, மினி கிளினிக்கிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்க ளுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் முடிவுற்ற நிலையில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திடீர் தேர்தல் அறிவிப்பினால் மாவட்டத்தில் பல்வேறு பணி களுக்கு விண்ணப்பித்து நேர்காணல் மற்றும் அரசின் நலத்திட்டம் பெறுவதற்கான பணிகள்தடைப்பட்டதால் விண்ணப்ப தாரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT