Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
புதுச்சேரி சுகாதாரத்துறை செய லர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,414 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 9, காரைக்காலில் 9, ஏனாமில் 2 என மொத்தம் 20 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. நேற்று மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. மேலும், புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த87 வயது முதியவர் ஜிப்மர்மருத்துவமனையில் உயிரிழந் தார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோ னாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,717 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 101 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 96 பேரும் என 197 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,852 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் 9,589 (28 நாட்களில்) சுகாதாரப் பணி யாளர்களும், 740 (17 நாட்களில்) முன்களப் பணியாளர்களும் என 10 ஆயிரத்து 329 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT