Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 75 சதவீத மானியத்தில் மின்சார புல்வெட்டும் கரு விகள் வழங்கப்படுகிறது. இக் கருவியைப் பெற ஒவ்வொரு விவசாயியும், குறைந்தபட்சம் 2 பசு வைத்திருக்க வேண்டும். 0.25 ஏக்கருக்கு குறைவில்லாமல் இறவையில் தீவனப்புல் பயிரிட்டுள்ளவராகவும், மின் இணைப்பு வசதி உள்ளவராகவும் இருக்க வேண்டும். கருவிக்கான விலையில் 25 சதவீதத்தை வங்கி வரைவோலையாக செலுத்துபவராக இருக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்துக்கு 20 கருவிகள் வழங்கப் பட்டுள்ளன. விருப்பமுள்ள விவசாயிகள் குடும்ப அட்டை, மொபைல் எண், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகி யவற்றுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT