Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
தூத்துக்குடி - குஜராத் மாநிலம் ஓகா இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்.2 முதல் இயக்கப்படவுள்ளது.
மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடியிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஓகா நகருக்கு வாராந்திர சிறப்பு ரயிலை (வண்டி எண்: 09568) இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் ஏப்ரல் 2 முதல் ஓகாவிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 09567) தூத்துக்குடியிலிருந்து ஏப்ரல் 4 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் அதிகாலை 3.35 மணிக்கு ஓகா சென்று சேரும். இந்த ரயில்கள் துவாரகா, ஜாம்நகர், ஹாபா, ராஜ்கோட், அகமதாபாத், வடோதரா, சூரத், புனே, அனந்தபூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகள் மற்றும் 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT