Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
தேர்தல் பணி மற்றும் தனிப்பட்ட சுற்றுப்பயணத்துக்கு வரும் அமைச் சர்களை அரசு ஊழியர்கள் சந்தித் தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேர வைத் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான அனைத் துத்துறை தலைமை அலுவலர்க ளுடான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் சு.சிவ ராசு தலைமை வகித்துப் பேசி யது: அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர், பிரதமர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் புகைப் படங்கள் இருப்பின் அவை உடனடி யாக அகற்றப்பட வேண்டும். மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர், ஆளுநர், மறைந்த தேசத் தலைவர்கள், கவிஞர்கள் ஆகியோரது புகைப்படங்களை அகற்றக் கூடாது.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களை உடனடியாக திரும்பப் பெற வேண் டும். சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை உடனடியாக பூட்டி முத்திரையிட வேண்டும். பொது இடங்களில் அமைக்கப் பட்டுள்ள கட்சி சார்ந்த கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
எந்த ஒரு அரசு அலுவலரும் கட்சி சார்பாகவோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்சிகளுக்கு எந்த ஒரு பங்களிப்பையும் செலுத் தக்கூடாது.
தேர்தல் பணியின் போதும், தனிப்பட்ட சுற்றுப்பயணத்தின் போதும் அரசு அலுவலர் எவரேனும் அமைச்சர்களை சந்தித்தால், அந்த அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து அரசு அலுவலர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், சார் ஆட்சியர்கள் நிஷாந்த் கிருஷ்ணா (ரங்கம்), ஜோதி சர்மா (முசிறி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரீத்தா, தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அனைத்து அரசுத்துறை தலைமை அலுவலர்கள் பங்கேற் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT