Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநகர பேருந்துகள் முழு அளவில்ஓடவில்லை. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதியபாதை அமைக்கும் பணிகள் கடந்த24-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம்தேதி வரையில் நடைபெறுவதாக தெற்கு ரயில்வே சென்னைகோட்டம் அறிவித்தது. அதன்படி,கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை தடத்தில் மின்சார ரயில்களின் சேவையும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், குறைவாக மின்சார ரயில்களை இயக்குவதால், கூட்ட நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக பயணிகள்கூறியதாவது: அரசு பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில்களில் பயணிக்க மக்கள் ரயில் நிலையங்களுக்கு வந்தனர். ஆனால், புதியபணிகள் நடப்பதாக கூறி, ரயில்சேவையை குறைத்துள்ளனர். வரும் ரயில்களில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு பிறகு பணிகளை மேற்கொள்ள ரயில்வேநடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT