Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
எழும்பூர் வட்ட சட்டப் பணிகள் குழுவுடன் இந்தியன் வங்கி (வடக்கு மண்டலம்) இணைந்து ‘லோக் அதாலத்’ (மக்கள் நீதிமன்றம்) நிகழ்ச்சியை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடத்தியது.
நிகழ்ச்சியை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை நடுவர் என்.கோதண்டராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:
மக்கள் நீதிமன்றம் மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வர இருக்கும்வழக்குகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வு காணப்பட்டால் மேல்முறையீட்டுக்கு செல்ல முடியாது.
பயனாளர்களின் பிரச்சினை களுக்கு சமாதான முறையில் தீர்வுகண்டு இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் முடிவை உத்தரவாக பிறப்பிக்க இந்தமக்கள் நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. இருதரப்பினரும் வெற்றி கொள்ளும் வகையில் மக்கள் நீதிமன்றத்தின் செயல்பாடு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். சட்ட ஆலோசனை மையத்தின் பொறுப்பு அதிகாரி மற்றும் எழும்பூர் பெருநகர நீதிமன்ற 6-வது குற்றவியல் நடுவர் எஸ்.தமிழ்ச்செல்வி பேசும்போது, ‘‘சட்ட விதிகளுக்கு உட்பட்டு பயனாளிகள் பயன் அடைய வேண்டும் என்பதே இந்த மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம்’’ என்றார்.
லோக்-அதாலத் நீதிமன்ற நடுவர் எஸ்.எஸ்.மாரியப்பன், இந்தியன் வங்கியின் வடக்கு மண்டல துணைப் பொது மேலாளர் எம்.ஆறுமுகம், உதவிப்பொதுமேலாளர் கே.பி.ராமன்,தலைமை மேலாளர் டி.ராஜேஸ்வரி, மேலாளர் தர்மராஜன், எழும்பூர் நீதிமன்ற தலைமை அதிகாரி ஜெ.சுப்பிரமணி, இந்தியன் வங்கியின் வழக்கறிஞர் ஆர்.எஸ்.துரியன், டி.கற்பகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்றத்தில் நேற்று 65 வழக்குகள் வந்தன. அதில், 55 வழக்குகள் சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT