Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்காக நாஞ்சிக்கோட்டை சாலையில் கல்லுக்குளம் அருகேயுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகினார்.
அங்கு, ஆனந்துக்கு திட்ட அனுமதி கொடுப்பதற்காக, அவரிடமிருந்து நேற்று முன்தினம் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் ஆர்.நாகேஸ்வரனை(52), தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகேஸ்வரனை மார்ச் 11-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, திருச்சி காட்டூர் விக்னேஷ் நகரிலுள்ள நாகேஸ்வரனின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில், ரூ.14 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகைகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும், வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT