Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன் தினம் ஆய்வு செய்தார்.
தண்டராம்பட்டு அடுத்த மேல் சிறுப்பாக்கம் கிராமத்தில் விவசாயி சீனிவாசனின் நிலக்கடலை விதைப்பண்ணை, கீழ் சிறுப்பாக்கம் கிராமத்தில் அண்ணாமலையின் விவசாய நிலத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் அமைக்கப்பட் டுள்ள கரும்பு சாகுபடியை ஆட்சி யர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
பின்னர் அவர், ராதாபுரம் கிராமத்தில் ராஜேந்திரனின் விவசாய நிலத்தில் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல் அறுவடை பணியை தொடங்கி வைத்தார். மேலும் அவர், தென் முடியனூர் கிராமத்தில் விவசாயி பாபுவின் நிலத்தில் மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு பெட்டி உள்ளிட்ட செயல்பாடுகளையும், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் திருமா வளவன் மற்றும் ரமண ஜோதி ஆகியோரது விவசாய நிலத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடியை பார்வையிட்டார். அப்போது, வேளாண் துறை அதி காரிகள் பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT