Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM
பண்பாட்டு அடையாளங்களை பிரதிபலிப்பதாக ஜல்லிக்கட்டு விழாநடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில் வரும் 31-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முன்னிலை வகித்தார்.
ஆட்சியர் கே.விஜயகார்த்தி கேயன் தலைமை வகித்து, ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கூறும்போது,
‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள் முன்னரே தெரிவித்து, முன் அனுமதி பெற வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாக விழா ஏற்பாடுகளை பூர்த்தி செய்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும். நிகழ்ச்சியின்போது ஏற்படும் அனைத்துவித அசம்பாவிதங்களுக்கும், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முழு பொறுப்பேற்க வேண்டும். தற்செயலாக ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதங்களுக்கு நிவாரணத்தொகை கோரி, அரசிடமிருந்து எந்தவித நிதியுதவியும் கோரமாட்டோம் என உறுதியளித்து, அதற்கான உறுதிமொழி படிவத்தை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும்.
விழா நிகழ்வை தேசியமயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடுசெய்வதுடன், காப்பீடு செய்த விவரத்தை உறுதிமொழி படிவத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்களை பிரதிபலிப்பதாக ஜல்லிக்கட்டு விழாஇருக்க வேண்டும். பார்வையாளர்கள் அரங்கை உறுதித்தன்மையுடன் அமைக்க வேண்டும். 3வயதுக்குகுறைவான, 15 வயதுக்கு மேற்பட்ட காளைகளை பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. தேசிய விலங்குகள் நலவாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய வாசகங்கள் கொண்ட பதாகைகளை, போதுமான அளவில் வைக்கப்பட வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT