Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM

இணையதளம் மூலம் இன்று முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை

தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் மூலம் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிய வாக்காளர்கள் இன்று (25-ம் தேதி) பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணைய வழி காட்டுதலின்படி, 11-வது தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25-ம் தேதி (இன்று) திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப் படவுள்ளது.

உறுதிமொழி எடுத்தல்

இதையொட்டி, வாக்காளர் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் தொடர்பான தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விவாதம் மற்றும் விளையாட்டு போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக சேர்ந்துள்ள வாக்காளர் களுக்கு தேசிய வாக்காளர் தின அட்டை வழங்கப்படும். மேலும், அனைவரும் வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்தில் புதிதாக சேர்ந்த வாக்காளர்கள் இன்று (25-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரையும், இதர வாக்காளர்கள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் சந்தேகம் இருந்தால், 1950 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது அந்தந்த வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவை அணுகலாம்.

100 சதவீத வாக்குப்பதிவு

இணையதளத்தில் செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்பு இணைய தளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்யும் அனுமதியை தேர்வு செய்ய வேண்டும்.

பட்டியலில் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது படிவம் 6-ஐ பதிவு செய்ததற்கான விண்ணப்ப எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு, செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்ட கடவுச் சொல்லை பதிவு செய்ததும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேசிய வாக்காளர் தின முக்கியவத்தை உணர்ந்து தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து, தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x