Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை - தூத்துக்குடி மற்றும் மணியாச்சி - நாகர்கோவில் இருவழி அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், மருதன்வாழ்வு நாரைக்கிணறு மற்றும் கயத்தாறு வட்டம்இளவேலங்கால் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்யப்படுகிறது. இதுதொடர்பான பொது விசாரணை 28-ம் தேதி மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருந்தது.
நிர்வாக காரணங்களுக்காக 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்று மாலை 4.30 மணிக்கு மருதன்வாழ்வு நாரைக்கினறு கிராமத்துக்கும், மாலை 5 மணிக்கு இளவேலங்கால் கிராமத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment