Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்ஆட்சியர்கள் உத்தரவு

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிப்படி திருவள்ளுவர் தினமான (வரும் 15-ம் தேதி), குடியரசு தினமான (வரும் 26-ம் தேதி) மற்றும் வள்ளலார் நினைவு நாளான (வரும் 28-ம் தேதி)யில் தி.மலை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட வேண்டும். மேலும் மதுக் கூடங்கள், எப்எல் 1, எப்எல் 2, எப்எல் 3, எப்எல் 3ஏ, எப்எல் 3 ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் மற்றும் எப்எல் 4 ஏ உட்பட அனைத்து மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரி வித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x