Published : 10 Jan 2021 03:30 AM
Last Updated : 10 Jan 2021 03:30 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு மற்றும் நெல்லிவாசல் நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளில் 24 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன.
இக்குழுவில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மலை யில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானிய உணவுப்பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய வசதியாக, ‘‘மத்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் அபி விருத்தி கூட்டமைப்பு திட்டத்தின்’’ கீழ் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சுய தொழில் தொடங்குவது தொடர்பான பயிற்சி முகாம் புதூர் நாட்டில் தொடங்கியது.
இப்பயிற்சியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது “பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம் படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இங்கு ஒரு காலத்தில் அதிகமாக சாமை, வரகு, திணை போன்றவை பயிரிடப் பட்டது. இப்போது, பழைய நிலை மாறி, நெல், வாழை சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். இதற்கு மாறாக பூக்கள், காபி போன்ற விவசாயத்தில் ஈடுபடலாம். இங்கு பல மூலிகைகள் இயற் கையாகவே கிடைக்கிறது. கடுக் காப்பொடியை நன்கு சுத்தம் செய்து விற்பனை செய்யலாம். இயற்கையாக விளையும் பொருட் களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இயற்கை பொருட்களை மதிப்பு கூட்டினால் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைக்கும். தற்போது, அனைவரும் ஆங்கில மருந்துகளுக்கு பதிலாக சித்த மருத்துவத்துக்கு திரும்பியிருக் கிறார்கள். அனைவரும் இயற்கைக்கு மாறி வருகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.250 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மத்திய பழங்குடி யினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலமாக பெண் களுக்கு பெரிய அங்கீகாரம், வருவாய் மற்றும் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல பெண் களின் நிலையும் மேம்பட்டுள்ளது. எனவே, இங்கு வழங்கப்படும் பயிற்சியை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு வழங்கப்படும் கையேட்டில் மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்களின் விவரம் உள்ளன. அதை இங்குள்ள மலைவாழ் மக்கள் தயாரித்தால் வெளிமாநிலம், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெறலாம்.
மலைவாழ் பெண்கள் குறைந்த பட்ச நேரத்தில் வேலை செய்தால் மாத வருமானமாக கூடுதலாக ரூ.1,000 முதல் ரூ.2000 வரை கிடைக் கும். இது போன்ற பயிற்சிகளை பெ்ணகள் நல்ல முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் குழு பெண்களுக்கு மலைத்தேன் எடுப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார். இதில், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, மத்திய பழங்குடி யினர் கூட்டுறவு சந்தைப் படுத்துதல் அபிவிருத்தி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT