Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் மூத்த குடிமக்கள் பேரவை யின் 24-ம் ஆண்டு முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
பேரவைத் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிறுவனர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு 75 வயது நிரம்பிய மூத்தவர்களுக்கு சான்றி தழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியது:
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களிலும் கூட கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலை யில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவும் வேகம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வரும் நாட்களிலும் கரோனா வைரஸ் தொற்று பரவாத நிலையை உருவாக்க தமிழக முதல்வர் தலைமையில் செம்மையாக செயல்படுவோம். நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட் பாளர் பழனிசாமி தான் என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT