Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.ரத்னகுமார், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இப்பல்கலைக்கழகத்தில் 80 பட்டப்படிப்புகளும், டிப்ளமோ உள்ளிட்ட 60 படிப்புகளும் நடத்தப்பட்டுவருகின்றன. இது தவிர பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பு நடத்தப்பட்டுவருகிறது. இவற்றில் சுமார் 8,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உயர்கல்வி மன்றத்தின் அங்கீகாரத்துடன் வடிவமைக்கப்பட்டவை. பாடங்கள் அனைத்தையும் மின்னூல்களாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் 6 மாத காலத்துக்குள் 80 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், மின்னூல்களாக மாற்றப்படும். யுஜிசி வழிகாட்டுதலின்படி மின் நூல்களாக மாற்றும் பணியில் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்.
மாணவர்களுக்கு, பயனர் முகவரி மற்றும் ரகசியக் குறியீடு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதலாக மின்னூல்களையும் தேடி எடுத்து படிக்கலாம். இவ்வாறு பதிவாளர் கே.ரத்னகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT