Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM
கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட் டமாக அறிவிக்க, வரும் மக்களவை கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன் எம்பி தெரி வித்தார்.
சிதம்பரத்தில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இதுவரை நிவாரண உதவிகள் வழங் கப்படவில்லை.
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நியாயமானது. நிர்வாகச் செலவுகளை காரணம் காட்டி மாணவர்கள் தலையில் சுமையை வைக்கக்கூடாது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 30 வருடங்களாக தினக் கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் 140 பேரை பணி நிரந்தரம் செய்யவேண்டும். சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் தினக்கூலியாக உள்ளவர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் அடிக்கடி புயல் மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படுவதை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வரும் கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன்
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் 3 சட்டமன்ற தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்கள் பெறப் பட்டுள்ளன.
தமிழக அரசு பொங்கலுக்கு ரூ.2ஆயிரத்து 500 வழங்க அறிவித்துள் ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவரவேற்கிறது. இதனை அதிமுக கட்சி வழங்குவது போல் தோற்றத்தை ஏற்படுத்துவது ஊழலை விட மோச மானது.
எனவே அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நடிகர் ரஜினி உடல் நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மருத்துவர்கள் எச்சரிக்கை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஒரு ஆண்டுக்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவர் அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பதாக கூறினார். தற்போதைய நிலையில் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரதுவிருப்பத்திற்கு மாறாக கட்சி ஆரம் பிக்க கூறியவர்கள், அழுத்தம் கொடுத்தவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளதா கவே கருதுகிறேன். இதில் குறிப்பாக சங்பரிவார் ,ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால், அதிமுகவை உடைக்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதிமுகவும் தற்காலிகமாக தப்பித்து உள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்க வில்லை என்றாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இருக்கப் போவதில்லை.
மத்திய அரசு, வேளாண் சட்டங் களை திரும்பப் பெற வேண்டும். இது ஆன்லைன் வர்த்தகத்திற்கு தான் பயன்படும். பொது விநியோகத்தை அழிக்கின்றது. எனவே அந்த சட் டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர் பால அறவாழி, நிர்வாகிகள் தாமரைச் செல்வன்,செல்லப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT