Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM
திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை மற்ற மீன் இனங்களை காட்டிலும் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. பண்ணைக் குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக் கூடியவை. நுகர்வோர் இவ்வகை மீன்களை அதிகம் விரும்புகின்றனர். எனவே, விவசாயிகள் தங்களின் பண்ணைக்குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்த்து பயன்பெறலாம்.
திலேப்பியா மீன் இன குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணையில் வருடம் முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளன. அவற்றை விவசாயிகள் கொள்முதல் செய்து வளர்த்து பயன்பெறலாம். இவ்வகை இன மீன்களை வளர்க்க விவசாயிகள் தங்களது மீன் பண்ணையைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, அதன் பின்னரே திலேப்பியா மீன்களை வளர்க்க வேண்டும். திலேப்பியா மீன் பண்ணைகள் அமைப்பது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு திருநெல்வேலி மகாராஜ நகரில் 26-வது குறுக்கு தெருவிலுள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 0462-2581488 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT