Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தி.மலை மாவட்டத்தில் 1,568 வீடுகள் ஒதுக்கீடு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தி.மலை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 1,568 வீடுகள் வழங்கப்படவுள்ளன என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளா தார ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த தகுதியான குடும்பங் களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 2019-20-ம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகப் பகுதி) கீழ் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் 1,568 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட மத்திய அரசின் பங்கு தொகையாக ரூ.1.20 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், மாநில அரசு சார்பில் மேற்கூரை நிதியாக வழங்கப்பட்டு வந்தரூ.50 ஆயிரம் என்பது தற்போது, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது. இது மட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 90 திறன்சாரா மனித சக்தி நாட்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.259 என மொத்தம் ரூ.23,310 மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு வீடு கட்ட, அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 310 வழங்கப்படுகிறது.

நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் உள்ள வீடு இல்லாதவர்கள், தங்களது முழு விவரங்களை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும், 2016-17 முதல் 2019-20-ம் ஆண்டு வரை, ஏற்கெனவே வேலை உத்தரவு பெற்று இறுதி பட்டியல் தொகை பெறாதவர்களும், உயர்த்தப் பட்டுள்ள மேற்கூரை நிதியை பெற்றுக்கொள்ளலாம்“ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x