Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM
மதுரை அருகே 6 தலைமுறைகளாக ஒரு குடும்பம் ஜல்லிக்கட்டுக் காளை களை வளர்த்து, போட்டிகளில் பங் கேற்கச் செய்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. தற்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.இ. படித்த இளைஞரும் பாரம்பரியத்தைக் கைவி டாமல் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்காக, காளை களின் உரிமையாளர்கள் அவற்றை மும் முரமாகத் தயார் செய்து வருகின்றனர்.
இந்தக் காளைகளை வேளாண் பணிகளில் பயன்படுத்தாமல், தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதி வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, இந்தப் போட்டியும், காளைகளும் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் போட்டிகள் புகழ் பெற்றவை. இந்தப் போட்டிகளுக்காக மதுரை அருகே எலியார்பத்தியில் ஒரு குடும்பத்தினர் 6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார்கள்.
தற்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.இ. படித்த வீராராம் பாரம்பரியத்தைக் கைவிடாமல் 4 காளைகளை வளர்க்கிறார். இவர்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டுக் காளைகள் ஒன்று கூட போட்டிகளில் ஜொலிக்காமல் போனதில்லை. மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டதும் கிடையாது. போட்டிகளில் காளைகள் பெற்ற பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், பீரோ போன்ற பரிசுப்பொருட்கள் வீடு முழுவதும் நிரம்பி இருப்பது பார்ப்போரை வியக்க வைக்கிறது.
இதுகுறித்து வீராராம் கூறியதாவது: நான் எம்இ படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறேன். மற்ற எந்தத் தொழில் செய்தாலும் விவசாயத்தையும், காளைகள் வளர்ப்பதையும் பாரம் பரியமாகச் செய்து வருகிறோம். முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடை மாடுகள் வளர்த்தோம்.
தற்போது 60 கிடை மாடுகள் உள்ளன. இந்த ஆண்டு ஜல்லிக் கட்டுக்காக 4 காளைகளைத் தயார் செய்து வருகிறோம். 1985 முதல் எங்கள் அப்பா, தாத்தா வளர்த்த காளை கள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்தன. முன்பு தொடர்ந்து 4, 5 ஆண்டுகள் பிடி படாமல் சிறப்பாக விளையாடும் காளைகளை ஜல்லிக்கட்டு விழா வில் கவுரவிப்பார்கள். அப்படி அலங் காநல்லூர் ஜல்லிக்கட்டில் எங்கள் காளைக்குப் பரிவட்டம் கட்டி சிறந்த காளையாகத் தேர்வு செய்தனர்.
பொதுவாக, ஜல்லிக்கட்டுக் காளை கள் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழும். ஆனால், நாங்கள் சிறப்பாகப் பராமரிப்பதால் 23 வயது வரையுள்ள காளைகள் கூட உள்ளன. நாங்கள் மற்றவர்களை போல் ஜல்லிக் கட்டுக் காளைகளுக்கு முறை வைத்து தீவனம் வைப்பது கிடையாது. தோட்டம் இருப்பதால் காளைகளுக்குத் தீவனம் கிடைத்துவிடுகிறது. மழை பெய்தால் தளைக்கும் பசும்புற்களைச் சாப்பிடும். தோட்டத்து வேலைக்குச் செல்லும்போது கட்டிப்போட்டு மேய விடுவோம். காளைகளுக்காக நாங்கள் செலவிடுவது நேரச் செலவு மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT