Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்க கண்காணிப்பு அலுவலர்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங் கும் பணிக்கு வட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட, பொது விநியோகம் திட்டத்தின் கீழ், அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கி உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு மற்றும் துணிப்பையுடன் கூடிய பொங்கள் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு 26-ம் தேதி (இன்று) முதல் 30-ம் தேதி வரை வீடுதோறும் சென்று ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாதவர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி வழங்கப்படும்.

குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும், அவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்களை வாங்க வர வேண்டும். முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறையின் 04175 – 233063 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்க லாம். மேலும், இதற்காக வட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண் காணிப்பு அலுவலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

கண்காணிப்பு அலுவலர்களாக செய்யாறு வட்டத்துக்கு கோட்டாட் சியர் விமலா (94450 00419), திரு வண்ணாமலை வட்டத்துக்கு கோட்டாட்சியர் தேவி (94450 00420), ஆரணி வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயராமன் (94454 71829), போளூர் வட்டத்துக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் (94436 35626), செங்கம் வட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கதிர்சங்கர் (94884 75633), ஜமுனாமரத்தூர் வட்டத்துக்கு பழங்குடியினர் நல திட்ட அலுவலர் இளங்கோ (86681 70604), வந்தவாசி வட்டத்துக்கு கலால் உதவி ஆணையர் கண்ணப்பன் (94440 61790), கலசப்பாக்கம் வட்டத்துக்கு தி.மலை ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்தன்(94442 74250), வெம்பாக்கம் வட்டத்துக்கு செய்யாறு ஊராட்சிகள் உதவி இயக்குநர் சுவாமிநாதன் (740290 3703), கீழ்பென்னாத்தூர் வட்டத் துக்கு திருவண்ணாமலை பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் ஆரோக்கியராஜ்(86105 58801), சேத்துப்பட்டு வட்டத்துக்கு செய்யாறு துணை பதிவாளர் கமலக்கண்ணன்(73387 49503), தண்டராம்பட்டு வட்டத்துக்கு தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் குமார் (74026 06612) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x