Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM

ஊழலை மறைக்க ஆளும் கட்சி மீது குறைகூறும் திமுக: அமைச்சர் ஜி.பாஸ்கரன்

சிவகங்கை: சிவகங்கையில் வருவாய் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஜி.பாஸ்கரன் 311 பேருக்கு ரூ.4.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

அதிமுக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் ஏதாவதொரு திட்டத்தைத் தொடங்கினால், ஊழல் செய்யவே தொடங்குவதாகக் கூறுகின்றனர். திமுகவினர் தங்களின் ஊழல்களை மறைக்கவே ஆளும்கட்சி மீது குறை சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் தொழிற்சாலைகள் வரவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். நாட்டிலேயே தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஸ்டாலின் தமிழக அரசு மீது குறை கூற வேண்டும் என்பதற்காகவே குற்றம் சுமத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x