Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் தலைமை வகித்தார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் தொடங்கிவைத்தார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் த.மணிமொழியன் ஆகியோர் பேசினர்.
இதேபோல, தஞ்சாவூர் அருகே மாத்தூர் கிராமத்தில், ராஜசேகரன் தலைமையில், தங்க.சண்முகசுந்தரம் முன்னிலையில், விவசாயிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதா நரசிம்மபுரம் கிராமத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவர் பாரதிச்செல்வன் தலைமை வகித்தார். திருவாரூர் கலைச் செல்வம், மன்னை ஹரிஹரன் மற்றும் ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT